இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2026 12:41 PM IST
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி
ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
- 13 Jan 2026 12:40 PM IST
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் - 4 போலீசார் சஸ்பெண்ட்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது பணியில் இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- 13 Jan 2026 12:36 PM IST
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உடனடி நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- 13 Jan 2026 12:35 PM IST
மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் - ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- 13 Jan 2026 12:34 PM IST
சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.
- 13 Jan 2026 12:08 PM IST
அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்களை கூடுதலாக உருவாக்கி வெளிநாட்டில் படித்த மருத்துவ பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரியுள்ளது.
- 13 Jan 2026 12:07 PM IST
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13 Jan 2026 11:46 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 13 Jan 2026 11:44 AM IST
டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு, வாட்டும் குளிர்; குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு
டெல்லியில், ஒட்டுமொத்த அளவில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
- 13 Jan 2026 11:09 AM IST
தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
















