இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2026 12:34 PM IST
சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.
- 13 Jan 2026 12:08 PM IST
அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்களை கூடுதலாக உருவாக்கி வெளிநாட்டில் படித்த மருத்துவ பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரியுள்ளது.
- 13 Jan 2026 12:07 PM IST
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13 Jan 2026 11:46 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 13 Jan 2026 11:44 AM IST
டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு, வாட்டும் குளிர்; குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு
டெல்லியில், ஒட்டுமொத்த அளவில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
- 13 Jan 2026 11:09 AM IST
தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 13 Jan 2026 11:07 AM IST
இந்த வார விசேஷங்கள்: 13-1-2026 முதல் 19-1-2026 வரை
13-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- 13 Jan 2026 11:06 AM IST
அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது. பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 13 Jan 2026 11:04 AM IST
டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் விஜய்: சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு
நேற்று விசாரணை முடிந்த பிறகு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய விஜய், இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். விஜய்யை 19-ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- 13 Jan 2026 10:27 AM IST
வரும் 19ம் தேதி விஜய்யை சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய்யை மீண்டும் ஜன.19ம் தேதி சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று 7 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார் விஜய்.
















