தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிராக புதிய வழக்கு
தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிராக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறம் பதிவு செய்யப்பட்ட கொடி நாங்கள் பயன்படுத்துவது என்று தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தெரிவித்துள்ளது, மேலும் இதனை சபை ஊழியர்கள், முகவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் வலது மற்றும் இடது கால்வாயில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதன்மூலம் 16 ஊர்களில் உள்ள 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
‘தலைவன் தலைவி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய இந்தியர்களுக்கு நன்றி - சுபான்ஷு சுக்லா
18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 வீரர்களும் இருந்ததால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பதை களைவதற்கு அவர்களுக்கு தசை அழுத்தம், மனோ திட பயிற்சி 7 நாட்கள் அளிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்று வெளியாகிறது ''ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்: சீசன் 5'' டீசர்
ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
கோவில் சிலை உடைப்பு - தீக்குளிக்க முயன்ற மக்கள்
விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் உள்ள நல்லதங்காள் கோவிலில் சிலை உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கோவிலுக்குள் பொதுமக்கள் செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்றபட்டநிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம்
திருச்சியில் அமைந்துள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது.
ரூ.367 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
பாமக 37-ஆம் ஆண்டு விழா: ஆட்சி அதிகாரத்தில் பங்கு - அன்புமணி சூளுரை
தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாமக என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி தவெக 2-வது மாநாடு - விஜய் அறிவிப்பு
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தவெக 2-ம் மாநாடு மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.