சென்னை: அனுமதியின்றி நடைபெற்ற கோயில் விரிவாக்கப் பணியை தடுத்த ராணுவத்தினர்

கோயில் விரிவாக்கப் பணியை ராணுவத்தினர் தடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-07-17 23:46 IST

சென்னை,

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் குளத்து மேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் புதிதாக வீடு கட்ட ராணுவம் அனுமதி மறுத்து வருகிறது.

இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலை விரிவாக்கம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது ராணுவ வீரர்கள் கோவில் கட்ட மறுப்பு தெரிவித்து, புதிதாக கட்டிய கோவில் பணிகளை நிறுத்தி கடப்பாரையால் கட்டுமானங்களை இடித்து அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்