மதுரை: மேலூர் அருகே பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக தூய்மை பணியில் ஈடுபட்ட போது பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.;

Update:2025-07-18 01:34 IST

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே செம்மனிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி பாலகர் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலை சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றன. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக கோவில் அருகே உள்ள இடங்களில் முட்புதர்களை கிராம மக்கள் அப்புறப்படுத்தினர். அப்போது முட்புதருக்குள் பழமையான ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து செம்மனிப்பட்டியை சேர்ந்த பொன்.கார்த்திக், ராமலிங்க சேதுபதி மற்றும் அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சிலை 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என கூறப்படுகிறது. இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் இ.மலம்பட்டி ஊராட்சியில் உடன்பட்டியில் முட்புதருக்குள் மறைந்து கிடந்த வட்ட வடிவ சிவலிங்கம், கல்வெட்டு எழுத்துக்களுடன் அடித்தள பகுதியுடன் இடிந்த பழமையான சிவன் கோவில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினால் பழமையான சிலைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளலாம். எனவே தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்