தூத்துக்குடியில் விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மாப்பிள்ளையூரணி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் அங்குள்ள பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மில்லுக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்தது.;

Update:2025-07-18 04:28 IST

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோர் ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். இதில் நேற்று 100க்கும் மேற்பட்ட ஆடுகள் அங்குள்ள பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மில்லுக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மில்லில் இருந்து வெளிவந்த ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தன. இதில் 2 ஆடுகள் அடுத்தடுத்து இறந்தன. மற்ற ஆடுகள் உயிருக்கு போராடின.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆடு வளர்ப்பவர்கள் அங்கு வந்து ஆடுகளை மீட்டு அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆடுகள் குருணை மருந்து கலந்த தவுடினை சாப்பிட்டுள்ளது என்றும் இதனால் ஆடுகள் இறந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் 15க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே ஆடுகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்