இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: உடற்பயிற்சியாளர் கைது

’உன் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்’ என்று இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.;

Update:2025-07-18 05:20 IST

சென்னை,

சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவர் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் சேர்ந்துள்ளவர்களுக்கு பயிற்சி மற்றும் பாடம் நடத்துவார். இவரது உடற்பயிற்சி மையத்தில் 28 வயது இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சி பெறுவதற்காக வந்து சேர்ந்தார். அந்த பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஆரம்பத்தில் அந்த பெண்ணிடம் நட்பு ரீதியாக பழகி வந்த ராஜ்குமார் நாளடைவில் அந்த இளம்பெண்ணை காதலிக்க ஆரம்பித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் ராஜ்குமாரை காதலிக்க மறுத்துவிட்டார்.

இதனால் ராஜ்குமார் அந்த இளம்பெண்ணுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். அவர் வேலை பார்த்த தனியார் நிறுவனத்திற்கும் சென்று என்னை காதலிக்காவிட்டால் 'உன் வேலையை காலி செய்துவிடுவேன்' என்று மிரட்டினார். உன்னுடைய புகைப்படங்கள் என்னிடம் உள்ளது என்றும், அந்த படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

மேலும் அந்த இளம்பெண்ணிடம் ராஜ்குமார் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளாா். அந்த பணத்தையும் தர முடியாது என கூறிவிட்டார். ராஜ்குமாரின் காதல் தொந்தரவை தாங்க முடியாத அந்த இளம்பெண் இதுகுறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்