பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி. கேட்டு மாணவன் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை கேட்டு மாணவனை தாக்கியுள்ளனர்.;

Update:2025-07-18 04:43 IST

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த சிறுவனை சந்தித்து பேசினார்.

அப்போது சிறுவனுக்கு தெரிந்த ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை கேட்டுள்ளார். ஆனால் அந்த மாணவன் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த மாணவனை மிரட்டி சரமாரி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவன் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கோபாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்