'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: சென்னையில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது.;

Update:2025-07-18 04:14 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) 6 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மணலி மண்டலம். மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், ஆர்.வி.நகர் குருமூர்த்தி பள்ளி, திரு.வி.க.நகர் மண்டலம். சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடம், தேனாம்பேட்டை மண்டலம், சூசைபுரம் சர்ச் ஆப் செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர், வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீபாக்யலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம், முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சன், சமூக நலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்