வீட்டில் பதுக்கி இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;

Update:2025-07-18 04:14 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 26 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை பார்த்ததும் வீட்டில் இருந்த பெண் தப்பி ஓடினார். விசாரணையில் தப்பி ஓடியவர் முருகன் மனைவி வெள்ளத்தாய் (வயது 50) என்பதும், இவர் அப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து, வெளி மாநிலத்திற்கு விற்பனைக்காக கடத்துவது தெரியவந்தது.

இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் பறிமுதல் செய்த ரேஷன்அரிசி மூட்டைகள் மற்றும் பைக்கை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடி தலைமறைவாக உள்ள வெள்ளத்தாயை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்