நீலகிரி: குடிநீர் குழாய்களை உடைத்த காட்டு யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update:2025-07-18 00:54 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக பசுமை திரும்பி உள்ளது. இதனால் காட்டு யானைகளுக்கு தேவையான பசுந்தீவனம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையையொட்டி உள்ள வனப்பகுதியில் போதுமான அளவு உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து யானை கூட்டம் இங்கு முகாமிட்டு உள்ளன.

இந்தநிலையில் குன்னூர் அருகே பர்லியார் அரசு பழப்பண்ணை குடியிருப்பு பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்தன. அவை குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், மின் வேலிகள், நுழைவுவாயில்களை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து, இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்