தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான காற்றாலை எரிந்து சேதம்
இந்த தீ விபத்தின் காரணமாக காற்றாலையின் ஒரு இறக்கை கீழே விழுந்தது.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாசார்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்து அதில் வரும் மின்சாரத்தை உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. திருப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று வழக்கம்போல இயங்கிக்கொண்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த காற்றாலையில் புகை வெளியேறி உள்ளது. இதனைத்தொடர்ந்து திடீரென தீயானது மளமளவென எரியத்தொடங்கியது. இந்த தீ விபத்தின் காரணமாக காற்றாலையின் ஒரு இறக்கை கீழே விழுந்தது.
தகவலறிந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான காற்றாலை எரிந்து சேதமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.