திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர்.
கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.