கோவில் சிலை உடைப்பு - தீக்குளிக்க முயன்ற மக்கள் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
கோவில் சிலை உடைப்பு - தீக்குளிக்க முயன்ற மக்கள்
விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் உள்ள நல்லதங்காள் கோவிலில் சிலை உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கோவிலுக்குள் பொதுமக்கள் செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்றபட்டநிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
Update: 2025-07-16 05:11 GMT