மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 16,288 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 118.63 அடியாக உயர்ந்துள்ளநிலையில், நீர் இருப்பு 91.302 டி.எம்.சி. ஆக உள்ளது
அணையில் இருந்து மொத்தமாக 7,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வயநாடு எம்.பி. பிரியங்காவை காணவில்லை: போலீசில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. இவர் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை என்று வயநாடு மாவட்ட பா.ஜனதா பட்டியல் மோர்ச்சா தலைவர் முகுந்தன் பள்ளியரா வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உள்ளார்.
புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல்
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை புதுச்சேரி அரசு கலால் துறை தற்காலிகமாக ரத்து செய்து சீல் வைத்துள்ளது.
டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவையை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா முடிவு
26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லி-வாஷிங்டன் இடையேயான நேரடி விமான சேவையை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்த உள்ளது.
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இன்று (12-08-2025) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு; சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரணை
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு வக்கீல் வினோத் என்பவர் ஆஜராகி, "மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அந்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக கூறினர்.
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா