தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் சாவு
பாட்டி, மகள், பேத்தி ஆகிய 3 பேரும், ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.;
தூத்துக்குடி, மீனாட்சிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தரசி (வயது 48). இவரது மகள் ஐஸ்வர்யா(30), பேத்தி காயத்ரி(5) ஆகிய மூன்று பேரும் கடந்த 1ம் தேதி ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
திருச்செந்தூர் ரோடு, முத்தையாபுரம் அருகே வரும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் முத்தரசி, அவரது மகள் ஐஸ்வர்யா, பேத்தி காயத்ரி ஆகிய மூன்று பேரும் காயம் அடைந்தனர். பின்னர் மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முத்தரசி இன்று காலை இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.