அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3-ந் தேதி (புதன்கிழமை) தமிழகம் வருகைதர இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்தகவலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.