‘இறுதிமூச்சு உள்ளவரை அ.தி.மு.க. தான்’ - முன்னாள் அமைச்சர் தங்கமணி

சில அரசியல் எதிரிகளின் தவறான தகவலை தெரிவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.;

Update:2025-08-13 22:03 IST

சென்னை,

முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அந்த தகவலை அவர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“11.8.2025 காலை 6.00 மணிக்கு அறுவை சிகிச்சை என்ற போதும், ஓய்வு எடுக்காமல் கடந்த 9.8.2025, 10.8.2025 ஆகிய தேதிகளில் திருச்சியில் முகாமிட்டு அண்ணன் எடப்பாடியார் சுற்றுபயணம் வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று கட்சிப்பணியாற்றியவனை பற்றி இப்படி ஒரு செய்தி வந்ததை எண்ணி மிகவும் மனவேதனைப்படுகிறேன்.

எனது இறுதி மூச்சு உள்ளவரை அ.இ.அ.தி.மு.க. இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அ.இ.அ.தி.மு.க. கொடி போர்த்தி தான் இருக்கும் என்பதையும், இது யாரோ சில அரசியல் எதிரிகளின் தவறான தகவல் தெரிவித்ததை செய்தியாக போட்டுள்ளீர்கள். இதை முழுமையாக மறுக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்