சென்னையில் நாளை 4 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (14.08.2025) 4 வார்டுகளில் நடைபெறவுள்ளது.;

Update:2025-08-13 21:46 IST

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (14.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-8ல் பெரியார் நகர், வெள்ளையன் செட்டியார் பள்ளி எதிரில் உள்ள பொதுவர்த்தக சங்கம், இராயபுரம் மண்டலம், வார்டு-61ல் திருவேங்கடம் தெருவில் உள்ள புனித அந்தோனிஸ் சமூகநலக் கூடம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-86ல் எம்.டி.எச். சாலையில் எச்.பி.எம். பாரடைஸ், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-137ல் சாலிகிராமம், 80 அடி சாலையில் உள்ள சமூகநலக் கூடம் ஆகிய 4 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்