33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் தலைவி பேட்டி
தூத்துக்குடியில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் நியமன கடிதங்களை வழங்கினார்.;
தூத்துக்குடி மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கும் விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவரில் வைத்து நடைபெற்றது. இந்ந விழாவுக்கு மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ப்ரீத்தி வினோத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் கலந்து கொண்டு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கி பேசினார்.
அதனை தொடர்ந்து, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. பெண்களுக்கு மத்தியில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது வரை அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே உடனடியாக பெண்களுக்கான மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
6.5 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் ஊடுருவி வருவதை தடுக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகிளா காங்கிரஸ் கமிட்டியினர் அடையாளம் கண்டு தடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர்கள் அன்னதாசி மரிய கிரேஸர், எலிசபெத், பொதுச் செயலாளர்கள் மீனாட்சி சுந்தரி, பிளஸ்சி ப்ளோரினா, செயலாளர்கள் சேஸி சுபாஷினி, வள்ளி மனோகரன், ரீனா மரிய அந்தோணி, துணை செயலாளர்கள் மதிமலர் சிந்தா, அக்ஷிலியா, முருகேஸ்வரி, சமூக ஊடகப் பொறுப்பாளர் அன்னமரியா, பொருளாளர் சீத்தாலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம், மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பககனி சேகர், மற்றும் ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் ராஜ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.