துரோகம் செய்தது திமுக: அன்புமணி பரபரப்பு பேச்சு

இந்தியாவில் ஏழு மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.;

Update:2025-08-13 20:40 IST

விழுப்புரம்,

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்புப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்றூ அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவில் அருகே அவர் பேசியதாவது:-

இந்த மண் சமூக நீதி மண். அய்யா இருக்க கூடிய மண். அதிகமாக டாஸ்மாக் விற்பனை நடைபெறும் மாவட்டமாக விழுப்புரம் உள்ளது, அதுமட்டுமல்லாமல் இங்கு கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக இருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு திமுகவினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள். ஜாபர் சாதிக் 3 ஆயிரம் கோடிக்கு போதை பொருள் விற்பனை செய்திருக்கிறார். அவர் திமுகவை சார்ந்தவர். தமிழக காவல் துறையினர் திறமை மிக்க காவலர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

பொய் வாக்குறுதிகளை அளித்து துரோகம் செய்தது திமுக.பொய் வாக்குறுதிகளை தந்த திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. திமுகவுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பளித்தும் மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.திமுக ஆட்சியில் பெண்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பாதுகாப்பு இல்லை. இட ஒதுக்கீடு தரும்படி முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட்டும் கொடுக்க மாட்டேன். எல்லாம் இருந்தும் இடஒதுக்கீடு தர முதல்-அமைச்சருக்கு மனமில்லை

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எந்திர்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இல்லை. திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது. எல்லாரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்