நாமக்கல்லில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சிறப்பு எஸ்.ஐ. கைது
55 வயதான மோகன் குமார் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.ஆக மோகன் குமார் (வயது 55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ மோகன் குமார் மீது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ மோகன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக மோகன் குமாரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.