தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு; சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரணை
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு வக்கீல் வினோத் என்பவர் ஆஜராகி, "மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அந்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக கூறினர்.
Update: 2025-08-12 03:48 GMT