இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025
x
தினத்தந்தி 24 Dec 2025 9:02 AM IST (Updated: 24 Dec 2025 7:35 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 24 Dec 2025 7:35 PM IST

    ‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’ - டி.டி.வி.தினகரன்

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அ.ம.மு.க.வை அணுகி அழைப்பது உண்மை. நாங்கள் யார் வரக்கூடாது என்பதற்காக போராடினோம். ஆனால் எங்களால் சட்டமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை அ.ம.மு.க. வேட்பாளர்கள் உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என கூறினார்.

  • 24 Dec 2025 6:45 PM IST

    1,000 ஒப்பந்த செவிலியர்கள் முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    போராட்ட குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் தொகுப்பூதிய செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்படும். தற்போது 723 காலி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  • 24 Dec 2025 5:21 PM IST

    தவெக கூட்டணியில் இணைகிறது ஓ.பன்னீர்செல்வம் அணி: 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு

    'அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும்' என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, 'அதிமுகவுடன் இனி சேரப்போவதில்லை' என்று தடாலடியாக அறிவித்து விட்டார்.

    ஏன் இந்த திடீர் மனமாற்றம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டது? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தது. அதற்கான பின்னணி தகவல்களும் கிடைத்துள்ளன.

  • 24 Dec 2025 4:55 PM IST

    கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில், அன்புக்கும் பொறுமைக்கும் கருணைக்கும் உலகம் முழுக்க அடையாளமாகத் திகழும் இயேசுநாதர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கழக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படிதான் என்றுமே இந்த ஆட்சி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • 24 Dec 2025 4:28 PM IST

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,211 விண்ணப்பங்கள் வந்துள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

  • அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தியர்கள் 30 பேர் கைது
    24 Dec 2025 3:58 PM IST

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தியர்கள் 30 பேர் கைது

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தியர்கள் 30 பேரை அந்நாட்டு எல்லைக் காவல்படை கைது செய்தது. ஓட்டுநர் உரிமங்களை பெற்று கனரக லாரிகளை இயக்கி வந்த இவர்கள், சோதனைச் சாவடிகளில் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 Dec 2025 2:36 PM IST

    நாளை உலகம் அழிய போகிறது. மீண்டும் மனிதர்களை படைக்கும் பொருட்டு, ஒருசிலரை மட்டும் காப்பாற்ற பேழைகளை கட்டுமாறு கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக சொன்ன கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர், உண்மையாகவே அந்த பேழைகளை கட்டிக்கொண்டுள்ளார். எபோவின் சீடர்கள் தங்களது உடைமைகள், சொத்துக்களை விற்று அளித்த பணத்தில், பாதுகாப்பு பேழை கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • 24 Dec 2025 2:35 PM IST

    தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாருக்கு பனையூரில் தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

  • சிறுத்தை கூண்டில் சிக்கிய விவசாயி
    24 Dec 2025 2:31 PM IST

    சிறுத்தை கூண்டில் சிக்கிய விவசாயி

    கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் அமைத்த இரும்பு கூண்டுக்குள் சிக்கிய கிட்டி என்ற விவசாயி. கூண்டை காணும் ஆர்வத்தில் உள்ளே சென்றதால் சிக்கிய அவர், 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

  • குளிருக்காக தீ மூட்டிய 5 பேர் உயிரிழப்பு
    24 Dec 2025 1:52 PM IST

    குளிருக்காக தீ மூட்டிய 5 பேர் உயிரிழப்பு

    அரியானாவில் குளிருக்காக அறையில் நிலக்கரியில் நெருப்பு மூட்டி தூங்கிய 5 தொழிலாளர்கள் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் நிலக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

1 More update

Next Story