இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Dec 2025 2:31 PM IST
சிறுத்தை கூண்டில் சிக்கிய விவசாயி
கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் அமைத்த இரும்பு கூண்டுக்குள் சிக்கிய கிட்டி என்ற விவசாயி. கூண்டை காணும் ஆர்வத்தில் உள்ளே சென்றதால் சிக்கிய அவர், 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
- 24 Dec 2025 1:52 PM IST
குளிருக்காக தீ மூட்டிய 5 பேர் உயிரிழப்பு
அரியானாவில் குளிருக்காக அறையில் நிலக்கரியில் நெருப்பு மூட்டி தூங்கிய 5 தொழிலாளர்கள் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் நிலக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
- 24 Dec 2025 1:50 PM IST
நகைக்காக மூதாட்டி கொலை
விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தில் 72 வயது மூதாட்டி 5 சவரன் நகைக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- 24 Dec 2025 1:46 PM IST
ஒரே பைக்கில் 5 பேர்; 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் அருகே ஆபத்தான முறையில் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் பயணம் செய்தனர். இது தொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார், 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
- 24 Dec 2025 1:44 PM IST
சந்திப்பால் சலசலப்பு
கன்னியாகுமரியில் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. இவ்விழாவில் தவெக நிர்வாகிகள் பங்கேற்றதால், குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்-க்கள் புறக்கணித்ததாக சொல்லப்பட்டது.
- 24 Dec 2025 12:34 PM IST
எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்ற காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அங்கு வந்த ஓபிஎஸ் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நலம் விசாரித்தார்.
- 24 Dec 2025 12:15 PM IST
எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார் தவெக நிர்வாகி செங்கோட்டையன்.
- 24 Dec 2025 11:46 AM IST
உன்னாவ் வழக்கில் திருப்பம்
நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம் .
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, பாதிக்கப்பட்டவரையோ அவரின் தாயையோ அச்சுறுத்த கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமினும் வழங்கியுள்ளது.
- 24 Dec 2025 11:29 AM IST
தென்காசியில் மட்டும் 300 வீரர்கள்
தென்காசி மாவட்டத்தில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே புருவம் உயர செய்துள்ளது.
















