இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Dec 2025 11:48 AM IST
2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- 20 Dec 2025 11:47 AM IST
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான், அதை எவரும் இழந்து விடக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 20 Dec 2025 11:45 AM IST
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன - சீமான்
பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
- 20 Dec 2025 11:32 AM IST
சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்குகிறது புத்தகக் காட்சி
சென்னையில் ஜன.8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது பெறுபவர்களின் பட்டியலை பபாசி நிறுவனம் வெளியிட்டது.
- 20 Dec 2025 11:26 AM IST
எஸ்.ஐ.ஆர்: விடுபட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - மு.வீரபாண்டியன்
ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பத்தில் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 20 Dec 2025 11:24 AM IST
பணி வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி
தூய்மைப் பணியாளர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
- 20 Dec 2025 10:36 AM IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- 20 Dec 2025 10:35 AM IST
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
- 20 Dec 2025 10:33 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, புதிய உச்சத்தில் ஒரு கிராம் ரூ.226-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
- 20 Dec 2025 10:31 AM IST
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















