இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Jan 2026 1:39 PM IST
விஜய் தலைமையில் 25-ந்தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்: தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
தவெக தலைவர் விஜய் தலைமையில் வருகிற 25-ந்தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Jan 2026 1:37 PM IST
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் விடுவிப்பு
டெல்லி கோர்ட்டின் சிறப்பு நீதிபதி திக் வினய் சிங், வழக்கில் இருந்து சஜ்ஜன் குமாரை விடுவித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- 22 Jan 2026 1:34 PM IST
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.
- 22 Jan 2026 1:33 PM IST
என்டிஏ கூட்டணியில் சேர்ந்தால் அதிக நிதி கிடைக்கும்: மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பினராயி விஜயன் இணைந்தால் கேரளாவிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
- 22 Jan 2026 1:32 PM IST
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ - நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- 22 Jan 2026 1:30 PM IST
சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் த.மா.கா. போட்டியிடும் - ஜி.கே.வாசன் அறிவிப்பு
மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார்.
- 22 Jan 2026 12:59 PM IST
பணம் கேட்டு தொல்லை: வி.சி.க. எம்.எல்.ஏ. மீது சபாநாயகரிடம் புகார்
திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி மீது புகார்கள் எழுந்தது.
- 22 Jan 2026 12:58 PM IST
மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை - எடப்பாடி பழனிசாமி
கறிக்கோழி விவசாயிகளின் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 22 Jan 2026 12:56 PM IST
அரசு ஊழியர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் அக்கறை காட்டவில்லை..? - மு.க.ஸ்டாலின் கேள்வி
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- 22 Jan 2026 12:17 PM IST
காசா போர்நிறுத்த ஒப்பந்த திட்டம் தொடர்பான அமைதி வாரியத்திற்கு ரஷியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கும் என புதின் கூறினார்.
















