இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jan 2026 9:23 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 20 Jan 2026 9:22 AM IST
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- 20 Jan 2026 9:20 AM IST
சென்னையில் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வரும் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 20 Jan 2026 9:19 AM IST
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20 Jan 2026 9:17 AM IST
புயல் பாதிப்பு; பிலிப்பைன்சுக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இந்திய விமான படையின் சி-17 ரக விமானத்தில், 30 டன் எடை கொண்ட நிவாரண பொருட்கள் பிலிப்பைன்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- 20 Jan 2026 9:16 AM IST
தனிக்கட்சி தொடங்க திட்டமா? பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை
தெலுங்கானாவில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை நடத்தினார்.
- 20 Jan 2026 9:15 AM IST
மவுனி அமாவாசை: 244 சிறப்பு ரெயில்கள் இயக்கம்; 4.5 லட்சம் பேர் பயணம்
கடந்த ஞாயிற்று கிழமை மவுனி அமாவாசை அன்று பக்தர்கள் திரண்டிருந்தபோது, ஹெலிகாப்டர் வழியே பூவிதழ்கள் தூவப்பட்டன.
- 20 Jan 2026 9:12 AM IST
மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் 5 பெண்கள் பலி
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் பரேலா பகுதியில் ஏக்த சவுக் என்ற இடத்திற்கருகே தொழிலாளர்கள் சிலர் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது. விரைவாக கார் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில், அந்த கார் திடீரென தொழிலாளர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சூர்யகாந்த் சர்மா கூறும்போது, இந்த சம்பவத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.
- 20 Jan 2026 9:08 AM IST
ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி
சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் சாப்பிட கூடிய வகையில் ஓட்டலில் உணவு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
- 20 Jan 2026 9:05 AM IST
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக இன்று பதவி ஏற்கிறார் நிதின் நபின்
பா.ஜ.க. தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிதின் நபினுக்கு ஆதரவாக 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
















