இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jan 2026 9:03 AM IST
'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்குமா..? சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று (செவ்வாய் கிழமை) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்பு முன் இன்று காலை 11.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
- 20 Jan 2026 9:02 AM IST
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- 20 Jan 2026 9:01 AM IST
விரும்பிய வரன் கிடைக்கும்... இன்றைய ராசிபலன் - 20.01.2026
துலாம்
குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இளம்பெண்களுக்கும், காளையர்களுக்கும் பெரியவர்களின் உதவியால் நல்ல துணை கிடைக்கும். கணவரின் வழி உறவினர்கள் தங்களுடன் நட்பு பாராட்டுவர். உதவியும் புரிவர். மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்









