இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jan 2026 10:02 AM IST
மீண்டும் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
இன்று தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 20 Jan 2026 10:00 AM IST
தமிழக சட்டசபை கூடியது: 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 20 Jan 2026 9:59 AM IST
கிரீன்லாந்து விவகாரம்; ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதி: டிரம்ப்
இங்கிலாந்து மற்றும் நேட்டோவின் பிற 7 உறுப்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் உறுதியுடன் கூறினார்.
- 20 Jan 2026 9:39 AM IST
யு19 உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்கா முதல் வெற்றி
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
- 20 Jan 2026 9:37 AM IST
ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு- ஸ்மித்
ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். தற்போது பிக்பாஷ் டி20 லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
- 20 Jan 2026 9:32 AM IST
அசாம் மாநிலத்திற்கான 1 ரூபாய் வடகிழக்கு முழுவதும் பயன் தரும்: முதல்-மந்திரி பிஸ்வா
வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட அசாமில் முதலீடு செய்ய வாருங்கள் என டாவோஸ் மாநாட்டில் முதல்-மந்திரி பிஸ்வா பேசினார்.
- 20 Jan 2026 9:30 AM IST
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
அம்பத்தூரில் உள்ள நகைக்கடைகள், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
- 20 Jan 2026 9:28 AM IST
சிலிண்டர் வெடித்து விபத்து: பலூன் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
ஆற்றுத்திருவிழாவில் பலூனுக்கு கியாஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்ததில் உடல் சிதறி பெண் பலியானார்.
- 20 Jan 2026 9:26 AM IST
பேச்சுவார்த்தை தோல்வி: சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
- 20 Jan 2026 9:24 AM IST
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு இன்று ஆலோசனை
சென்னையில் உள்ள தவெக தலைமை நிலைய செயலகத்தில், இன்று காலை இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
















