இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Jan 2026 2:41 PM IST
நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் - சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். காலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 71,000 பேர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- 19 Jan 2026 2:39 PM IST
மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசுப் பேருந்து, சமயநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.
- 19 Jan 2026 2:36 PM IST
ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை
அதிமுகவை ஒருங்கிணைப்பேன் எனகூறிவரும் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சி அரசூரில் சசிகலா தலைமையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 19 Jan 2026 11:23 AM IST
மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் அடிக்கல்
- சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக ECR நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில்| ரூ.342.60 கோடியில் அமைக்கப்படவுள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- 4,375 ஏக்கரில், 1.6 டிஎம்சி கொள்ளளவில், ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமையவுள்ளது
- 19 Jan 2026 10:28 AM IST
சிபிஐ முன்பு விஜய் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். இன்று மாலைக்குள் அவரிடம் விசாரணையை முடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,இன்று இரண்டாவது முறையாக விஜய் ஆஜராகியுள்ளார்.















