இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-01-2026


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-01-2026
x
தினத்தந்தி 19 Jan 2026 9:26 AM IST (Updated: 19 Jan 2026 4:50 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • டெல்லியில் விஜய்யிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு
    19 Jan 2026 4:50 PM IST

    டெல்லியில் விஜய்யிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு

    டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு பெற்றது. கரூர் நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஏற்கெனவே ஜன.12-ல் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. செப்27-ல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

  • யார் அதிகம் குடிக்கிறார்கள்? என போட்டி.. உயிரை பறித்த மது
    19 Jan 2026 4:17 PM IST

    யார் அதிகம் குடிக்கிறார்கள்? என போட்டி.. உயிரை பறித்த மது

    ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பந்தயம் கட்டி போட்டி போட்டுக் கொண்டு தலா 19 பீர்கள் குடித்த ஐ.டி. பொறியாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சங்கராந்தி பண்டிகைக்காக வந்த நண்பர்கள் மணிகுமார் (35), புஷ்பராஜ் (27) இருவரின் உயிரிழப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியது..

  • ஜம்மு காஷ்மீரில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
    19 Jan 2026 4:10 PM IST

    ஜம்மு காஷ்மீரில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

    ஜம்மு காஷ்மீர் லே - லடாக் பகுதியில் 5.-7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு தயார் நிலையில் உள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக மோடி, புதினுக்கு டிரம்ப் அழைப்பு
    19 Jan 2026 4:07 PM IST

    காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக மோடி, புதினுக்கு டிரம்ப் அழைப்பு

    காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட காசா பகுதியில் அமைதியை மீண்டும் கொண்டுவர டிரம்ப் வகுத்த 20 அம்ச திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

  • மெட்ரோ ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு
    19 Jan 2026 3:49 PM IST

    மெட்ரோ ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு

    மெட்ரோ ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய மெட்ரோ நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருக்கைகள் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • திருப்பரங்குன்றம் தர்கா வழக்கு: மனு தள்ளுபடி
    19 Jan 2026 3:46 PM IST

    திருப்பரங்குன்றம் தர்கா வழக்கு: மனு தள்ளுபடி

    திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்து தனி நீதிபதி இடைக்கால உத்தரவே பிறப்பித்துள்ளார். மனு விசாரணைக்கு உகந்தது அல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

  • தமிழ்நாடு வருகிறார் பியூஷ் கோயல்
    19 Jan 2026 3:28 PM IST

    தமிழ்நாடு வருகிறார் பியூஷ் கோயல்

    3 நாள் பயணமாக வரும் 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய மந்திரியும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். வரும் 22ம் தேதி அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நிலையில், மற்ற கட்சிகளுடனும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் - சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
    19 Jan 2026 2:41 PM IST

    நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் - சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

    தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். காலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 71,000 பேர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  • 19 Jan 2026 2:39 PM IST

    மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசுப் பேருந்து, சமயநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.

1 More update

Next Story