இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Dec 2025 3:30 PM IST
தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சார்-பதிவாளரை பணம் கேட்டு மிரட்டியதாக வாராகி என்பவரை மயிலாப்பூர் போலீஸார் செப்.13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். யூடியூபர் வாராகியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரின் மனைவி நீலிமா வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வராகிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 12 வாரங்களுக்குள் போலீசார் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 30 Dec 2025 2:54 PM IST
மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: வன்னி அரசு
"நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது மதவெறி கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் ஆகியோர் கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை வாய்திறக்கவும் இல்லை. மக்கள் இந்த கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" -விசிக துணைப் பொதுசெயலாளர் வன்னி அரசு பேச்சு
- 30 Dec 2025 1:32 PM IST
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
- 30 Dec 2025 1:31 PM IST
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- 30 Dec 2025 12:35 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜராகியுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 Dec 2025 12:34 PM IST
எஸ்.ஐ.ஆர். விழிப்புணர்வு வாசகம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரை மீண்டும் இணைப்பதற்கான கடைசி தேதி (18-01-2026) இடம்பெற்றுள்ளது.
- 30 Dec 2025 11:58 AM IST
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
- 30 Dec 2025 11:43 AM IST
1,000 கோல்கள் அடிப்பதே என்னுடைய இலக்கு என ரொனால்டோ தெரிவித்துள்ளார். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அதை அடைந்து விடுவேன் எனவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- 30 Dec 2025 11:26 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
1,300 விமானங்களை கையாளும் திறன் கொண்ட டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக இன்று 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















