இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Jan 2026 4:35 PM IST
இயேசு ஓவியத்தை ரூ.2,500 கோடிக்கு ஏலத்தில் விற்ற டிரம்ப்
புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் ஏலத்தில் இயேசு ஓவியத்தை சுமார் ரூ.2,500 கோடிக்கு விற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். வெனெசா ஹோரபியூனா என்ற ஓவியர் வரைந்த இந்த ஓவியத்தின் தொடக்க விலை ரூ.90 லட்சமாக இருந்தது.
- 1 Jan 2026 3:54 PM IST
சிகரெட் மீது கூடுதல் வரி - பிப்ரவரி 1 முதல் அமல்
* சிகரெட் மீது கூடுதல் கலால் வரியை விதித்தது மத்திய நிதி அமைச்சகம்
* 1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.
*சிகரெட் பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி மீது கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- 1 Jan 2026 3:36 PM IST
புத்தாண்டில் சோகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டார் வாகையடி தெருவில் வசித்துவரும் செந்தில் என்பவரது மனைவி சந்தியா(25) என்ற இளம் பெண் குடும்ப பிரச்சினை காரணமாக புத்தாண்டு தினத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1 Jan 2026 3:30 PM IST
1429 சதவீதம் கூடுதல் மழை
சென்னையில் குளிர்கால பருவமழை பொழிவு இன்று காலை வரை இயல்பை விட 1,429 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. தமிழ்நாடு மொத்தம், இன்று கால வரை இயல்பை விட 42 சதவீதம் கூடுதலாக மழை பொழிவு பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 1 Jan 2026 1:53 PM IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- 1 Jan 2026 1:33 PM IST
ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்: ஜான் பாண்டியன்
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக நான் பதவி வகித்து உள்ளேன். ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு நான் மிகவும் மன வருத்தப்பட்டேன். வன்னியர்களுக்காக போராடிய போராளி கண்ணீர் விட்டது வருத்தத்திற்குரியது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இணைய வேண்டும் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
- 1 Jan 2026 1:31 PM IST
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
ஆங்கிலபுத்தாண்டு நாளான இன்று (வியாழக்கிழமை) வழக்கம்போல் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட வருகைதருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
- 1 Jan 2026 12:33 PM IST
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் விருத்தாசலத்தில் நிற்கும்
நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 1-ந் தேதி (இன்று) முதல் பரீட்சார்த்த முறையில் விருத்தாசலத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.















