இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Jan 2026 1:33 PM IST
ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்: ஜான் பாண்டியன்
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக நான் பதவி வகித்து உள்ளேன். ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு நான் மிகவும் மன வருத்தப்பட்டேன். வன்னியர்களுக்காக போராடிய போராளி கண்ணீர் விட்டது வருத்தத்திற்குரியது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இணைய வேண்டும் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
- 1 Jan 2026 1:31 PM IST
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
ஆங்கிலபுத்தாண்டு நாளான இன்று (வியாழக்கிழமை) வழக்கம்போல் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட வருகைதருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
- 1 Jan 2026 12:33 PM IST
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் விருத்தாசலத்தில் நிற்கும்
நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 1-ந் தேதி (இன்று) முதல் பரீட்சார்த்த முறையில் விருத்தாசலத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
- 1 Jan 2026 12:02 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 1 Jan 2026 11:11 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் உண்டா? இல்லையா? - வெளியான முக்கிய தகவல்
பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. ரூ.2 ஆயிரம் வழங்கலாமா? அல்லது ரூ.3 ஆயிரம் வழங்கலாமா?, நிதி எவ்வளவு தேவைப்படுகிறது? என்று அரசு கணக்கிட்டு வருகிறது. இன்றோ, நாளையோ ரொக்கப் பணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
- 1 Jan 2026 10:54 AM IST
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1 Jan 2026 10:43 AM IST
திமுக ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
- 1 Jan 2026 10:40 AM IST
2025-ல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி தகவல்
2025-ம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2025-ம் ஆண்டு 20,471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9,770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1 Jan 2026 10:38 AM IST
2025ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கூகுள் பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்டவைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2025-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைபடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
- 1 Jan 2026 10:36 AM IST
"விஜய் இவர்களை சமாளித்தாலே அரசியலில் ஜெயிச்சிடுவாரு"- எச்.வினோத் கருத்து
விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது. "முட்டாள்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எது நல்லது. எது கெட்டது என தெரியாதவர்கள். அறிவாளிகளுக்கு நல்லது, கெட்டது தெரியும்.
அறிவாளி அயோக்கியர்கள், எது நல்லது என்பதை வெளியில் சொல்லாமல் அதை தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடியாள் போல மோசமான விஷயங்களை செய்வார்கள். இந்த 4 வகை மனிதர்களை சமாளித்தாலே போதும், விஜய் அரசியலில் ஜெயிச்சிடுவார்னு நம்புறேன்.." என எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார்.
















