இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

Update:2025-08-19 09:19 IST
Live Updates - Page 6
2025-08-19 04:35 GMT

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி

இந்த ஆண்டு றுதியில் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் மணிகா போட்டியிட உள்ளார்.

2025-08-19 04:34 GMT

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் தேர்தல் தேதி அறிவிப்பு


மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகி உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 28-ந் தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

2025-08-19 04:31 GMT

ஊர்க்காவல் படை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை போலீசார் அழைப்பு


சென்னை பெருநகர போலீஸ்துறையின் கடலோர காவல் படையின் ஊர்க்காவல் படைக்கு மீனவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர், எவ்வித குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை போலீஸ்துறை எல்லைக்குள், மெரீனா கடற்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. சுற்றளளவில் வசிப்பவராக இருக்க வேண்டும், மீன்வளத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

2025-08-19 04:30 GMT

விமான நிலையங்களில் பணி செய்ய ஆசையா? வந்தது அறிவிப்பு


மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 

2025-08-19 04:28 GMT

ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9.235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,880 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 126க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025-08-19 04:01 GMT

''தினமும் அதை சொல்வேன்''... - டிரோல்களுக்கு பதிலளித்த ஜான்வி கபூர்

சமீபத்தில் மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் ஜான்வி கபூர் பங்கேற்றார். அவ்விழாவில் தயிர் பானையை உடைத்து அவர் மகிழ்ந்தார். அப்போது அவர் "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலானநிலையில், இது சுதந்திர தினம் அல்ல என்று ஜான்வி டிரோல் செய்யப்பட்டார்.

2025-08-19 03:59 GMT

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-19 03:54 GMT

மீனவர்கள் வேலைநிறுத்தம்: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - இன்று திட்டமிட்டபடி ரெயில் மறியல் போராட்டம்


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இன்று மாலை 3 மணிக்கு தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ராமேசுவரம்- தாம்பரம் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-08-19 03:53 GMT

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. ‘இந்தியா’ கூட்டணியில் இழுபறி.. இன்று மீண்டும் ஆலோசனை


துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தக்கூடும் என பேசப்படுகிறது.

இதுபற்றி முடிவு எடுப்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் இதில் கலந்துகொண்டு விவாதித்தனர்.

கூட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


2025-08-19 03:52 GMT

ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,00 கன அடியில் இருந்து 88,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட காவிரி கரையோரம் உள்ள 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்