ஊர்க்காவல் படை பணிக்கு மீனவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
ஊர்க்காவல் படை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை போலீசார் அழைப்பு
சென்னை பெருநகர போலீஸ்துறையின் கடலோர காவல் படையின் ஊர்க்காவல் படைக்கு மீனவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்போர், எவ்வித குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை போலீஸ்துறை எல்லைக்குள், மெரீனா கடற்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. சுற்றளளவில் வசிப்பவராக இருக்க வேண்டும், மீன்வளத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
Update: 2025-08-19 04:31 GMT