சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி நெசவு தொழிலாளி உயிரிழப்பு

சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி நெசவு தொழிலாளி உயிரிழந்துள்ளார்.;

Update:2025-08-19 17:52 IST

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கொங்கணாபுரத்தை சேர்ந்த குப்புசாமி என்பவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்துள்ளார். நெசவுத் தொழிலாளியான அவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது.

நாய் கடித்ததில் இருந்து தற்போது வரை எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை என்றும், தடுப்பூசியும் போடவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 நாட்களாக ரேபிஸ் தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குப்புசாமி இன்று உயிரிழந்துள்ளார்.

முன்னதாக குப்புசாமியின் மகனையும் நாய் கடித்து, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தற்போது நலமுடன் உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்