ராமேஸ்வரம்: ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள்

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரெயில் மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.;

Update:2025-08-19 19:05 IST

ராமேஸ்வரம், 

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படை சிறைபிடிப்பது, தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகிவருகிறது. மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகளையும், 57 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஓரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. அது மட்டுமின்றி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய அரசை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதன் காரணமாக தங்கச்சிமடம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டு இருந்தனர்.

தடுப்பு பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், திட்டமிட்டபடி மீனவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில்கள்  நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இந்த போராட்டத்தை மீனவ அமைப்புகள் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் போரட்டத்தை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக  தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற  ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்