துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. ‘இந்தியா’... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. ‘இந்தியா’ கூட்டணியில் இழுபறி.. இன்று மீண்டும் ஆலோசனை


துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தக்கூடும் என பேசப்படுகிறது.

இதுபற்றி முடிவு எடுப்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் இதில் கலந்துகொண்டு விவாதித்தனர்.

கூட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


Update: 2025-08-19 03:53 GMT

Linked news