ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
x

image courtey:PTI

இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.

புதுடெல்லி,

இந்திய மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கெதிராக 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுள்ளது. சலீமா டெட் கேப்டனாகவும், நவ்னீத் கவுர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

முன்களம்: நவ்னீத் கவுர், தீபிகா, ருதாஜா தாதாசோ பிசல், பியூட்டி, மும்தாஜ் கான், பல்ஜீத் கவுர், தீபிகா சோரேங்.

நடுகளம்: சலிமா டேட் (கேப்டன்), வைஷ்ணவி, நேஹா, ஷர்மிளா தேவி, மனிஷா சவுகான், சுனேலிதா தோப்போ, மகிமா டேட், பூஜா யாதவ், லால்ரெம்சியாமி.

கோல்கீப்பர்கள்: சவிதா, பிச்சுதேவி கரிபாம்,

பின்களம்: ஜோதி சிங், இஷிகா சவுத்ரி, சுசிலா சானு, சுஜாதா குஜூர், சுமன் தேவி, ஜோதி, அஜ்மினா குஜூர், சாக்ஷி ராணா.

இந்த தொடருக்கான அட்டவணை:-

1. இந்தியா - ஆஸ்திரேலியா ஏ - ஏப்ரல் 26-ம் தேதி

2. இந்தியா - ஆஸ்திரேலியா ஏ - ஏப்ரல் 27-ம் தேதி

3. இந்தியா - ஆஸ்திரேலியா - மே 1-ம் தேதி

4. இந்தியா - ஆஸ்திரேலியா - மே 3-ம் தேதி

5. இந்தியா - ஆஸ்திரேலியா - மே 5-ம் தேதி

அனைத்து போட்டிகளும் பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளன.

1 More update

Next Story