புரோ ஆக்கி லீக்: பாகிஸ்தான் அணி சேர்ப்பு


புரோ ஆக்கி லீக்: பாகிஸ்தான் அணி சேர்ப்பு
x
தினத்தந்தி 30 Aug 2025 4:00 AM IST (Updated: 30 Aug 2025 4:00 AM IST)
t-max-icont-min-icon

புரோ ஆக்கி லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது உறுதியாகி இருக்கிறது.

புவனேஸ்வர்,

டிசம்பர் மாதம் தொடங்க உள்ள 7-வது புரோ ஆக்கி லீக் தொடரில் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகளுடன் இந்த முறை பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடந்த நேஷன்ஸ் ஆக்கி கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தான் முதலில் தகுதி பெற்றிருந்தது. ஆனால் இந்த தடவை புரோ லீக்கில் தங்களால் இணைய இயலாது என்று நியூசிலாந்து கூறி விட்டது.

இதனால் அதே போட்டியில் 2-வது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அணியும் சம்மதம் தெரிவித்து விட்டது. இதன் மூலம் புரோ ஆக்கி லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் 2 முறை நேருக்கு நேர் மோதுவது உறுதியாகி இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை. பாகிஸ்தான் அணியும் இந்தியா வராது. அதனால் இவ்விரு அணிகளுக்குரிய ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடத்தப்பட உள்ளது.

1 More update

Next Story