புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது தோல்வி


புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது தோல்வி
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இந்த தொடரில் இந்திய அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை.

ஆம்ஸ்டெல்வீன்,

9 அணிகள் இடையிலான 6-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்விய தழுவியிருந்தது.

இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் மீண்டும் நெதர்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதியில் நெதர்லாந்து மேலும் 2 கோல்கள் அடிக்க இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. முடிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் நாளை மோத உள்ளது.

1 More update

Next Story