புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

Image Courtesy: @TheHockeyIndia
புரோ ஆக்கி லீக்கின் ஐரோப்பிய சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
9 அணிகள் இடையிலான புரோ ஆக்கி லீக்கின் ஐரோப்பிய சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி, நெதர்லாந்துடன் ஜூன் 7 மற்றும் 9-ந் தேதியும், அர்ஜென்டினாவுடன் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளிலும் மோதுகிறது. இந்த ஆட்டங்கள் ஆம்ஸ்டர்டாமில் நடக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியாவை ஜூன் 14, 15-ந் தேதியும், பெல்ஜியத்தை ஜூன் 21, 22-ந் தேதியும் ஆன்ட்வெர்ப்பில் சந்திக்கிறது.
முன்னதாக இந்தியாவில் நடந்த சுற்று முடிவில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்று முறையே முதல் இரு இடங்களில் இருக்கின்றன. இந்தியா 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி என 15 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய சுற்று போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார். இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: கிஷான் பகதூர் பதாக், சுரஜ் கார்கெரா.
பின்களம்: சுமித், அமித் ரோஹிதாஸ், ஜூக்ராஜ் சிங், நீலம் சன்தீப் செஸ், ஹர்மன்பிரீத் சிங், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், யாஷ்தீப் சிவாச்.
நடுகளம்: ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், ரஜிந்தர் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷாம்ஷெர் சிங்.
முன்களம்: குர்ஜந்த் சிங், அபிஷேக், ஷிலானந்த் லக்ரா, மன்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங், சுக்ஜீத் சிங்.