புரோ ஆக்கி லீக்: இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் தோல்வி


புரோ ஆக்கி லீக்: இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் தோல்வி
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இந்த தொடரில் இந்திய ஆண்கள் அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஆக்கி லீக் தொடரில் ஐரோப்பிய சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின.

இதில் கோல் மழை பொழிந்த பெல்ஜியம் 6-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மீண்டும் பெல்ஜியத்தை இன்று சந்திக்கிறது.

முன்னதாக பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் பணிந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி மறுபடியும் பெல்ஜியத்துடன் மோதுகிறது.

1 More update

Next Story