புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணியிடம் இந்தியா போராடி தோல்வி


புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணியிடம் இந்தியா போராடி தோல்வி
x

கோப்புப்படம் 

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்தித்தது.

ஆம்ஸ்டர்டாம்,

9 அணிகள் இடையிலான 6-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்தித்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

அர்ஜென்டினா அணியில் கேப்டன் மத்யாஸ்ரே (3-வது நிமிடம்), லூகாஸ் மார்டினஸ் (17-வது நிமிடம்), சான்டியாகோ தரசோனா (34-வது நிமிடம்), லூசியோ மென்டிஸ் (46-வது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (12-வது மற்றும் 33-வது நிமிடம்), அபிஷேக் (42-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினர். ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். முன்னதாக நெதர்லாந்துக்கு எதிரான இரு ஆட்டங்களில் தோற்று இருந்தது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று மீண்டும் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

1 More update

Next Story