தேசிய சீனியர் மகளிர் ஆக்கி: மிசோரம், மணிப்பூர், ஒடிசா அணிகள் வெற்றி


தேசிய சீனியர் மகளிர் ஆக்கி: மிசோரம், மணிப்பூர், ஒடிசா அணிகள் வெற்றி
x

image courtesy:twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 8 March 2025 9:17 AM IST (Updated: 8 March 2025 9:18 AM IST)
t-max-icont-min-icon

இந்த தொடரின் 7-வது நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

பஞ்ச்குலா,

தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 'ஏ', 'பி', 'சி' என்று மூன்று டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மிசோசரம் 6-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணியை பந்தாடியது. மற்ற் ஆட்டங்களில் பஞ்சாபை வீழ்த்தி மணிப்பூர் அணியும், கர்நாடகா அணியை வீழ்த்தி ஒடிசாவும் வெற்றி பெற்றன. பெங்கால் - உத்தரகாண்ட் ஆட்டம் சமனில் முடிந்தது.




Next Story