தேசிய சீனியர் மகளிர் ஆக்கி: ஜார்கண்ட் அணி சாம்பியன்


தேசிய சீனியர் மகளிர் ஆக்கி: ஜார்கண்ட் அணி சாம்பியன்
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் - அரியானா அணிகள் மோதின.

பஞ்ச்குலா,

தேசிய சீனியர் மகளிர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்றது. இதன் லீக் மற்றும் காலிறுதி சுற்றுகளின் முடிவில் அரியானா, மிசோரம், மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

அரையிறுதியில் மிசோரம் அணியை 0-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரியானாவும், மராட்டியத்தை சூட் அவுட்டில் 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜார்கண்ட் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் ஜார்கண்ட் - அரியானா இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி ஜார்கண்ட் சாம்பியன் பட்டம் வென்றது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான போட்டியில் மராட்டியத்தை வீழ்த்தி மிசோரம் வெற்றி பெற்றது.

1 More update

Next Story