ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

image courtesy:twitter/@TheHockeyIndia
இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஜோஹர் பாரு,
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணியில் குர்ஜோத் சிங் மற்றும் சவுரப் ஆனந்த் தலா ஒரு கோல் அடித்தனர். மலேசியா தரப்பில் நாவீனேஷ் பானிக்கர் கோல் அடித்தார்.
இதன் மூலம் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த சூழலில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Related Tags :
Next Story






