ஆக்கி இந்தியா லீக் அட்டவணை அறிவிப்பு: தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு- ஐதராபாத் மோதல்


ஆக்கி இந்தியா லீக் அட்டவணை அறிவிப்பு: தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு- ஐதராபாத் மோதல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 Oct 2025 1:15 PM IST (Updated: 26 Oct 2025 1:15 PM IST)
t-max-icont-min-icon

8 அணிகள் இடையிலான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

8 அணிகள் இடையிலான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை, ராஞ்சி, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் அடுத்தடுத்து இந்த போட்டி அரங்கேறுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஜனவரி 3-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஐதராபாத் டூபான்சை எதிர்கொள்கிறது. தொடர்ந்து முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையில் 9-ந் தேதி வரை நடக்கிறது. 2-வது கட்ட ஆட்டங்கள் ராஞ்சியிலும் (11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை) 3-வது மற்றும் கடைசி கட்ட ஆட்டங்கள் புவனேஷ்வரிலும் (17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை) நடக்கிறது.

இதே போல் மகளிர் ஆக்கி இந்தியா லீக் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி ராஞ்சியில் வருகிற டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை நடக்கிறது.

1 More update

Next Story